மன்னார் புதைகுழியில் இதுவரை 54 எலும்புக்கூடுகள் மீட்பு!

மன்னாரில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 53 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக, சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர நுழைவாயிலில், பழைய சதோச கட்டடம் இருந்த பகுதியில், மன்னார் நீதிவான் பிரபாகரன் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி கடந்த 41 நாட்களுக்கு மேலாக இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று வரை 53 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 34 எலும்புக்கூடுகள் முத்திரையிடப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.