விஜயகலாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அடுத்த மாதம் முடிவு!

விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த மாதம் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் வெளியிட்ட ஐதேகவின் தவிசாளர் கபீர் காசிம்,
“விஜயகலா மகேஸ்வரனை விளக்கமளிக்குமாறு கட்சி கோரியுள்ளது என்று நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் விளக்கமளித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் செயற்குழு கூடும் போது இதுபற்றி முடிவு செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.