யாழில் கோர விபத்து மூவர் உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக தொடருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து யாழ்ப்பாணம் நெளுக்குளம் தொடருந்துக் கடவையில் இன்று மதியம் நடந்துள்ளது.

அரியாலை பூம்புகார் மற்றும் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மணியம்தோட்டம் பகுதியில் இருந்து நெளுக்குளம் வீதியை நோக்கி, பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாது, ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும் பயணித்துள்ளனர்.

தொடருந்து வந்துகொண்டிருந்த போது, சமிஞ்ஞை விளக்கு ஒளிர்ந்த வண்ணம் இருந்துள்ளது. மூவரும் அதி வேகத்தில் வந்தமையினால், வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியாமல் தொடருந்துடன் மோதினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் சேதமடைந்ததுடன், கையடக்கத் தொலைபேசி மற்றும் வாகன சாவி (திறப்பு) என்பன சம்பவ இடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்டனர். 

No comments

Powered by Blogger.