யாழில் தேர் வடம் பிடிக்கும் இராணுவம்!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது.

இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர்.

அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், தமது சீருடையின் மேலங்கியை கழட்டி விட்டு தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்... இதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் சாணக்கியம்!???

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை செய்த சிங்கள இராணுவம் இப்படியெல்லாம் நாங்கள் சர்வதேசத்துக்கு அழுத்தத்தை கொடுத்து அதிலிருந்து ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கும் பொழுது தாயகத்தில் இராணுவம் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்கி போர்க்குற்ற விசாரணை இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இங்கே படையினர் தேர் இழுப்பதை படம் எடுத்துக் கொண்டு இருப்பவர் சர்வதேசத்தின் ஒரு ஊடகவியலாளர் அல்லது அவர்களால் அனுப்பப்பட்ட ஒரு உளவுத்துறை ஆக இருக்கலாம்.

இது சர்வதேசத்தின் ஊடாக சொல்லப்படும் செய்தி என்னவென்றால் இலங்கையில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இணைந்து சந்தோசமாக வாழ்கிறார்கள் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது..

ஆகவே நாங்கள் எங்கள் கையால் மண்ணை தலையில் போட்டுக் கொள்கிறோம் இனிய சிங்கள அரசாங்கத்தோடு தமிழர் தரப்பு நல்லிணக்கம் செய்கிறது தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல தமிழ் மக்களும் நல்லிணக்கம் செயல்களால் என்பதைத்தான் இது காட்டுகிறது!! 

No comments

Powered by Blogger.