அனந்தியின் ஆதாரங்கள் அஸ்மினிடமாம்!

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி பெற்றுக் கொண்டமைக்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன.


அவற்றை அடுத்த மாகாண சபை அமர்வில் பகிரங்கப்படுத்துவேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.

எனினும் இதனை அனந்தி மறுத்து ஊடகங்களுக்கு செய்திக்கு குறிப்பு அனுப்பியிருந்தார். இந்நிலையில் அஸ்மினை தொடர்பு கொண்டு கேட்ட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் அனந்தி தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக அனுமதி கோரியுள்ளார். அதன் படி அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார்.

இதனை அவர் மறைக்க ஊடகங்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றார் என்றும் அஸ்மின் தெரிவித்தார்.
Powered by Blogger.