பிரான்­சி­லி­ ருந்து வந்­த­வர்,யாழில் திடீ­ரென மயங்கி வீழ்ந்து உயி­ரி­ழந்தார்!

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தனது தாயா­ரின் வீட்­டுக்கு பிரான்­சி­லி­ ருந்து வந்­த­வர், நேற்­றுத் திடீ­ரென மயங்கி வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ளார்.

சுது­மலை தெற்கு மானிப்­பாய் சேர்ந்த ஜோசெப் அருள்­தாஸ் (வயது-–38) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளார். இலங்­கைக்கு சில தினங்­க­ளுக்கு முன்­னர் வருகை தந்­த­வர், தனது தாயா­ரின் வீட்­டில் தங்­கி­யுள்­ளார்.

அவர் தாய் வீட்­டில் நேற்­றுத் தேநீர் குடித்து விட்டு இருந்த போது மயங்கி வீழ்ந்­துள்­ளார். உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார்.

அவர் உயி­ரி­ழந்து விட்­ட­தாக மருத்­து­வர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இறப்பு தொடர்­பான விசா­ர­ணையை யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சாலை திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிரே­ம­கு­மார் மேற்­கொண்­டார். 

No comments

Powered by Blogger.