அப்பா படத்தில் நடிக்க அதர்வா மறுப்பு

விஜய்யை வைத்து பிரியமுடன், யூத் என 2
படங்களை இயக்கியவர் வின்செண்ட் செல்வா. ஸ்டண்ட் மாஸ்டர் சிவாவை கதாநாயகனாக்கி வேட்டையன் என்னும் படம் இயக்க இருக்கிறார். அவர் இதுபற்றி கூறும்போது, ’கோலிசோடா 2 மூலம் வில்லன் ஆகிவிட்டார் ஸ்டண்ட் சிவா.
இது முழுக்க முழுக்க ஆக்‌‌ஷன் படம் என்பதால் அவரையே ஹீரோவாக்கி விட்டேன். அவர் தெலுங்கில் பயங்கர பிசி. இந்த படத்துக்காக சிரஞ்சீவி, ராம்சரண் என்று முன்னணி நடிகர்களின் பெரிய படங்களையே இழந்துள்ளார்.
ஆசியாவிலேயே ஜாக்கி சான், டோனி ஜாவுக்கு பிறகு ஹீரோ ஆகும் சண்டை பயிற்சியாளர் இவர் தான். இரணியன் 2 படத்தில் நடிக்க எந்த ஹீரோவும் முன்வரவில்லை. அதர்வாவை 2 முறை சந்தித்தேன். அவரும் ஆர்வம் காட்டவில்லை.
இந்த படம் காமெடி கலந்த ஆக்‌‌ஷன் படமாக இருக்கும். யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அச்சு இசை அமைக்கிறார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது’ என்றார். 

No comments

Powered by Blogger.