சுனைனாவின் ‘நிலா நிலா ஓடி வா!’
காளி படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த சுனைனா தற்போது ‘நிலா நிலா ஓடி வா’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சுனைனாவுக்கு வரவேற்பு பெற்றுத்தந்தது வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்கள் தான். திரைப்படங்களிலிருந்து வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ள சுனைனா இந்த முறை ஹாரர் த்ரில்லரில் நடிக்கிறார். திரு திரு துறு துறு படத்தின் இயக்குநர் ஜே.எஸ். நந்தினி இயக்க, மங்காத்தா படத்தில் நடித்திருந்த அஸ்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஹாரருடன் ரொமாண்டிக்-காமெடிக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. காட்டேரிகள் சென்னை நகரத்தைக் கைப்பற்ற முயல, மக்கள் அவற்றை வேட்டையாடுவதே கதையின் மையமாகும். அஸ்வின் டாட்டூ கலைஞராக வலம் வருகிறார். பத்து ஆண்டுகளுக்குப் பின் தான் விரும்பிய சுனைனாவை பார்க்க வருகிறார். அவரோ காட்டேரியாக மாறிவிடுகிறார். சன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வத், பவித்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘நிலா நிலா ஓடி வா’ தொடர் வியு (Viu) தளத்தில் வரும் செவ்வாய்க் கிழமை முதல் 13 எபிசோடுகளாக வெளிவரவுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை