ராஜமவுலி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது அதிதியின் கனவு!

இயக்குநர் ராஜமவுலி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு என்று, நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.
நடிகை அதிதி ராவ் தமிழில் 2007ஆம் ஆண்டு சிருங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பாலிவுட் படங்களிலேயே அதிக கவனம் செலுத்திவந்தார். மீண்டும் தமிழில் 2017ஆம் ஆண்டு, பத்து வருட இடைவெளிக்குப் பிறகு காற்று வெளியிடை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துவருகிறார். கடந்த ஜூன் 15ஆம் தேதி வெளியான சம்மோஹனம் தெலுங்கு படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார் அதிதி.
அப்படத்தில் அவரது நடிப்பை இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் தனது டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிதி ராவ் ராஜமவுலியின் பாராட்டு குறித்து கூறுகையில், “அவரது பாராட்டு காவிய கதை சொல்லின. அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டிவிட்டுள்ளது. ஏற்கனவே மணிரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி எனப் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ள எனக்கு ராஜமவுலி படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவும், விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது தவிர, சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் அதிதி ட்விட்டர் மூலம் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். அதில் சில...
உங்களது ஃபேவரைட் ஹீரோ?
கடினமான கேள்வி, ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ஆமிர் கான் மற்றும் ஷாருக் கான்.
உங்கள் அழகின் ரகசியம்?
அதை என் அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன்.
மணிரத்னம் பற்றி சில வார்த்தைகள்
அவர் சிறந்தவர்
உங்களுக்கு விருப்பமான சுற்றுலாத்தலம்
கோடைக் காலத்தில் லண்டன்.
பிடித்தமான திரைப்படங்கள்?
ரொமான்ஸ்... த்ரில்லர்.
உங்களுக்கு மிகவும் பிடித்த தூண்டுதலான மேற்கோள்?
நாள் முடிவில் உங்களின் பாதங்களில் அழுக்கு இருக்கலாம், தலை முடி கலைந்திருக்கலாம், இருந்தாலும் நீங்கள் பிரகாசமாக இருக்க வேண்டும்.
வான் வருவான் படல்
வான் ... இது எனக்கு விசேஷமானது, ஏனென்றால் அந்தப் பாடலின் வழியே, பியானோவில் ரஹ்மான் சார் உடன் வாழ்கிறேன் ... அது ஒரு கனவு.
நீங்கள் வாழ்க்கையில் வெறுக்கும் ஒன்று மற்றும் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நபர்?
வெறுப்பு என்பது ஒரு பயனற்ற விஷயம். ஆனால் வன்முறையைப் பரப்பும் மக்களை வெறுக்கிறேன். நான் என் அம்மாவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறேன். அவள் என்னை யார் என்று ஆக்கியிருக்கிறாள்.
Powered by Blogger.