ஜி.வி.பிரகாஷின் அடுத்த அப்டேட்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 'அடங்காதே' திரைப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தனக்கான டப்பிங் வேலையை ஆரம்பித்துள்ளார் ஜி.வி.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . 2006ஆம் ஆண்டு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தனது முதல் படத்திலேயே அங்கீகாரம் பெற்ற ஜி.வி, அதே ஆண்டில் ‘ஓரம்போ’ மற்றும் ‘கிரீடம்’ படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் தனி கவனம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து வருடத்திற்கு நான்கு படங்கள் வீதம் இசையமைத்து, தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வர தொடங்கினார். இசையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஜி.வி. 2015ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் ஜி.வியிடம் தற்போது அடங்காதே, 4G, ஐங்கரன், சர்வம் தாளமயம், 100% காதல் போன்ற படங்களில் நடிப்போடு இசையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் M.S.சரவணன் தயாரிக்கும் படம் அடங்காதே. சண்முகம் முத்துசுவாமி இயக்கும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும், சுரபி கதாநாயகியாகவும் நடிக்க, சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அனைத்துப் படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் தனக்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை பி.கே.வர்மா கவனிக்க, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

No comments

Powered by Blogger.