“விஸாம் இஸ் பேக்” - விஸ்வரூபம் - 2

விஸ்வரூபம் - 2 படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உருவாகிவரும் படம் விஸ்வரூபம் - 2. ஏற்கனவே வெளியான இதன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவரவுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவர இருக்கிறது. தமிழ் மற்றும் இந்தியில் நேரடி வெளியீடாகவும் தெலுங்கில் டப்பிங் முறையிலும் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இதன் இரண்டாவது ட்ரெய்லர் நேற்று (ஜூலை 28) யூட்யூப்பில் வெளியாகியுள்ளது. ரத்தம் வழியும் இந்திய வரைபடத்துடன் தொடங்கும் இந்த ட்ரெய்லர் கமலிடம் ஆயுத பயிற்சி பெற்ற ஆண்ட்ரியா ஒருவருடன் சண்டை போடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. அடுத்த காட்சியில் தோன்றும் கமல் “அரசியல்வாதிகள் நேர்மையாகச் சமரசம் பேசினாலே தீவிரவாதத்தை ஒழித்துவிடலாம்” எனக் கூறும் ஒரு வசனமும் இடம்பெற்றுள்ளது. ‘விஸாம் இஸ் பேக்’ என்னும் ஹேஸ்டாக் இதில் இடம்பெற்றிருக்கிறது.
Powered by Blogger.