‘டெத் ஓவர்’க்கு வந்த சோதனை!

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 

இங்கிலாந்துடன் மூன்று டி20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடங்கவிருப்பதால் இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். 

அவருடன் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரும் நீக்கப்பட்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு பயிற்சியின்போது வாஷிங்டன் சுந்தர் காலில் காயம் ஏற்பட்டது. காயம் அதிகமானதால் அவர் இந்தியா திரும்புகிறார். அவர் ஒருநாள் போட்டித் தொடரிலும் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. அதுபோல இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு, அயர்லாந்துடன் நடந்த முதல் டி20 போட்டியின் போது இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.

ஆகவே அவர் டி20 தொடரில் பங்கேற்ற மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு நாள் போட்டித் தொடருக்குள் அவர் குணமாகிவிடுவார் என்று கூறப்படுகிறது. டி20 போட்டிகளில், குறிப்பாகப் போட்டியின் கடைசி நேர ஓவர்களைச் சிறப்பாக வீசும் பும்ரா அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.


ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக அக்ஸர் படேலும் டி 20யில் குணால் பாண்ட்யாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதுபோல பும்ராவுக்கு மாற்றாக டி20 தொடரில் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டிருக்கிறார். மாற்று வீரர்கள் மூவருமே தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணியில் விளையாடி வருகின்றனர்.

Powered by Blogger.