இங்க பாருங்கோ?இடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டமாம்??

யாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

யாழ். இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் வழிகாட்டலின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இதுவரை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.