யாழில் ஜனாதிபதியின் எட்டாவது மக்கள் சேவை திட்டம் ஆரம்பம்!

ஐனாதிபதியின் மக்கள் சேவையின் யாழ் மாவட்ட எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம்

இன்று திங்கட்கிழமை காலை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஐனாதிபதி, பிரதமர் செயலகங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின்
ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் அரச அதிபர் தலைமையில்
நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன,உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
வஜிர அபய குணவர்தன,ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், முதலமைச்சர்
விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராசா,
,சுமந்திரன்,ஈ.சரவணபவன்,வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், வடக்கு
அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட அரசஅதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.