பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.!

இன்றுடன் 500 வது நாளினை எட்டிநிக்கின்றது. இதுவரையில் அரசு பாதிக்கப்பாட்டோருக்கான எந்தவொரு தீர்க்கமான பதிலினையும் வழங்கவில்லை மாறாக சர்வதேசத்தின் வாயை மூடிக்கொள்வதற்காக
வெறுமனே ஒரு பணியகத்தை நிறுவி அதன் மூலம் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று கூறிவருகின்றது.

இந்த நிலையில் இன்று 500வது நாளில் பாதிக்கப்பட்டோருக்கான தீர்வினை காலதாமதமின்றி வழங்க பிரிட்டன் அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டி பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழக தமில் மாணவர்களின் ஏற்பாட்டில் அனைத்து புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக
1/07/2018 மதியம் 1 மணிமுதல் நடைபெற்ற இப்போராட்டத்தில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடைபெற்றுவரும் இனவழிப்பு , காணி சுவீகரிப்பு போன்றவற்றுக்கும் எதிராக கோஷங்களை பிரசவித்தனர்.
அத்தோடு தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரில் பங்குகொண்டுள்ள வடக்கு கிழக்கு மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் , தாயகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இப்போராட்டம் பலம் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
யதுர்சன் சொர்ணலிங்கம்
லண்டன்
கருத்துகள் இல்லை