நிபுணர் குழுவின் அறிக்கை வழிநடத்தல் குழுவால் நிராகரிப்பு!
"பொது இணக்கப்பாடின்றி நிபுணர்கள் குழுவால் முன்வைக்கப்பட்ட அறிக்கையானது அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது'' என்று குழுவின் உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு பணி தொடர்பில் எழுந்த சர்ச்சையின்போது கருத்து வெளியிடுகையிலேயே அநுர இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வழிநடத்தல் குழுவின் தலைவராக பிரதமர் இருக்கின்றபோதிலும், அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக நீங்களே (சபாநாயகர்) பதவி வகிக்கின்றீர்கள். எனவே, இது விடயத்தில் உங்கள் கரிசனை மிகவும் அவசியம்.
வழிநடத்தல் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அடுத்தகட்ட கலந்துரையாடலுக்கான ஆவணமொன்றைத் தயாரிக்குமாறு நிபுணர் குழுவுக்கு வழிநடத்தல் குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
நிபுணர் குழுவின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அந்தப் பத்திரம் தயாரிக்கப்படவேண்டும். ஆனால், பொது இணக்கப்பாடு இல்லாமலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது நேற்று (நேற்றுமுன்தினம்) புலனானது.
ஒருசிலரின் ஆலோசனை மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், வழிநடத்தல் குழுவால் மேற்படி அறிக்கை நிராகரிக்கப்பட்டது.
பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் பேச்சுக்கான பத்திரத்தை சமர்ப்பிக்க நிபுணர் குழுவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கப்பால் செய்வதற்கு இடமளிக்கப்படாது'' - என்றார்.

#Janatha Vimukthi Peramuna

.jpeg
)

கருத்துகள் இல்லை