காட்டுப்புலம் - ஒரு சமூக உரையாடல்!


அண்மையில் ஆறு வயதான மாணவி லோகநாதன் ரெஜீனா படுகொலை செய்யப்பட்டமையானது நமது சமூகத்தை பெரும் மன நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதுடன் பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான சமூகப் பாதுகாப்புக் குறித்த அவநம்பிக்கையையும் ஆழமாகத்
தோற்றுவித்திருக்கிறது.

அதிகரித்துவரும் இதுபோன்ற வன்முறைகளைத் தோற்றுவிக்கின்ற சமூகப் பின்புலத்தையும், சமூகத்தில் அதிகரித்துவருகின்ற இது போன்ற பாதுகாப்பற்ற நிலவரங்களைக் களைவதற்குமான உள்ளூர்ப் பொறிமுறைகளை கண்டடைவதற்காகவும் அவற்றின் தேவைபற்றிக் கலந்துரையாடுவதற்காகவும் காட்டுப்புலத்தை ஒரு தொடக்கமாகக் கொண்டு தொடர் உரையாடல்களை பல்வேறு சமூகமட்டக் குழுக்களுடன் இணைந்து நடாத்த தீர்மானித்துள்ளோம். அதன் முதல் உரையாடல், காட்டுப்புலத்தில் உள்ள மக்களுடன், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உரையாடுவதனூடாக ஆரம்பிக்கிறோம்.

அனைத்துத் தரப்பு சமூகக் குழுக்களையும் அமைப்புகளையும் சமூக ஆர்வலர்களையும் இப் பொது அழைப்பை ஏற்று இந்த உரையாடல்களில் பங்கேற்று அவற்றைக் காத்திரமானதாகவும் செயல்வடிவத்தை நோக்கி நகர்த்தவல்லதாகவும் ஆக்க தோழமையுடன் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.