விஜயகலா கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா ?சர்சையில் ரனில்!

அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்து, பிரதமர் ரணில்
விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, விஜயகலாவிற்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீளவும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் இலங்கை அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் தற்போது முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.