ஒரே இலக்கத்துடன் இரு மோட்டார் சைக்கிள்!
சட்டவிரோதமான முறையில் ஒரே இலக்கத்தில் இரு மோட்டார் சைக்கிள்களைப் பாவனையில் வைத்திருந்த சகோதரர்கள்
இருவரைக் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக இன்று காலை காத்தான்குடி பிரதான வீதியில் வைத்து ஒரு மோட்டார் சைக்கிளையும், ஏறாவூரில் வைத்து மற்றொரு மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.குறித்த ஒரே இலக்கங்களைக் கொண்ட இம்மோட்டார் சைக்கிள்கள் கடந்த ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த மோட்டார் சைக்கிள்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

.jpeg
)

கருத்துகள் இல்லை