வந்தாறுமூலையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

மட்டக்களப்பு – கரடியனாறு, வந்தாறுமூலை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வந்தாறுமூலை – பாளமடு தெற்கு பகுதியிலுள்ள தமது கால்நடைப் பண்ணைக்கு இன்று காலை 7 மணியளவில் சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்ட மக்கள், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

No comments

Powered by Blogger.