யாழ் வடமராட்சியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

தனது வீட்டின் முன்பாக நின்றிருந்த இளைஞரொருவரை முச்சக்கர
வண்டியில் வந்த இனம்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி வெட்டித் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி கரணவாய் முதலைக்குழி பகுதியில் நேற்றுச் சனிக்கிழமை(30) பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் தனது வீட்டின் முன்பாக நின்றிருந்த போது பச்சைநிற முச்சக்கர வண்டியில் வந்த இனம் தெரியாத நபர்கள் சிலர் வாளால் வெட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் இளைஞர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபகுதியைச் சேர்ந்த ரிசிகரன் ரேகன்(வயது- 22) என்ற இளைஞரே குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்தவரார். சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.