பேருந்து விபத்தில் 45 பேர் பலி!

உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 45 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று பௌன் பகுதியிலிருந்து ராம்நகர் பகுதிக்கு இன்று காலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பவுரி கருவால் மாவட்டத்தில் இருக்கும் நனிதண்டா என்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மலைப் பகுதியில் குறுகலான பாதையில் பேருந்து சென்றபோது சாலை விளிம்பில் இடித்து சுமார் 60 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது. 20 பயணிகள் வரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பகல் ஒரு மணி வரையில் உயிரிழப்பு 45 ஆக அதிகரித்துள்ளது.
பேருந்தில் இருந்த மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்தில் அடிபட்டவர்கள், இறந்தவர்கள் விவரம் தெரியவில்லை. பள்ளம் ஆழமாக இருப்பதால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது
Powered by Blogger.