யாழ். வாழ்வாதார உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்!

யாழ். சமுர்த்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரீசன் அதிகாரிகளை பணித்துள்ளார்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்க்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான யாழ். மாவட்டத்திற்கான சமுர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

யாழ். மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.மகேஸ்வரன் தலைமையில் யாழ். நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன்போது யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பயானாளிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் உத்தியோகத்தர்களை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான தீர்வுகளையும் முன்வைத்துள்ளார்.
அத்துடன் நிலுவையிலுள்ள பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு அதிகாரிகளை பணித்த அமைச்சர், கிராம மட்டங்களில் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள உதவித் திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, சமுர்த்தி திணைக்களத்தின் முத்திரை குலுக்கல் வீட்டுத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து பேருக்கு தலா இரண்டு லட்சம் வீதம் நிதியுதவி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், அருணை திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பத்து பேருக்கு தொழில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிராணி வீரக்கோன், சமுர்த்தி பணிப்பாளர் தடாலகே, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

#Tamilnews   #Makeswaran    #Karisan  #Jafffna

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.