இலங்கை அணுப்ப கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவில் மீட்ப்பு!

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை மண்ணில் பதுக்கி வைத்திருந்த 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே சீனியப்ப தர்ஹா கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் தனி பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து இராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரணை செய்த போது, இலங்கைக்கு கடத்துவதற்காக சீனியப்பா தர்ஹா கடற்கரை மண்ணில் கஞ்சா பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதியை தோண்டிய பொலிஸார் 152 கஞ்சா பொதிகளை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளில் மொத்தமாக 304 கிலோ கஞ்சா இருந்தது.

அதனை கைப்பற்றிய பொலிஸார் கடத்தல்காரர்கள் மூவரையும் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 50இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.