யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் மர்மம் என்ன?

யாழ்.கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சம் போர்த்துக்கேயர் காலத்துக்கு உரியதாக இருக்கலாம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


யாழ்.கோட்டை உட்பகுதியினுள் அகழ்வு பணிகளின் போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதிகளின் கீழ் போர்த்துக்கேயர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று படிமங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தற்போது அமெரிக்க பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாச்சார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாக இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுகின்றன.

இதன்போது, கோட்டையின் உட்புறமான மத்திய பகுதியில் முன்னதாக போர்த்துக்கேயர் காலத்து தேவாலயம் ஒன்று இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தேவாலயத்திற்கு அருகில் கிணறு ஒன்று இருந்தமைக்கான சான்றுகளும், தேவாலய சுவர்கள் இருந்தமைக்கான சான்றுகளும் கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் அகழ்வு பணியின் போது மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன.

அது போத்துக்கேயர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், ஆய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முதல் நாம் எதனையும் உத்தியோகப்பூர்வமாக செல்ல முடியாது எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.