வெடிக்காத வெடிபொருள்- கிளிநொச்சியில் மீட்பு!

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் மக்களின் பாவனைக்காணியில் இருந்து வெடிக்காத வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மருதநகர் 5 அடிவான் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில், வெடிபொருள் காணி உரிமையாளரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உரிமையாளர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.