அனந்தியின் முன்மொழிவை நிராகரித்த- வடக்கு அவைத்தலைவர்!

துப்பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்தமை எனது சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஓர் தீர்மானத்தை வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் முன்மொழிந்த போதும் அதனை வடக்கு மாகாண பேரவைத் தலைவர் நிராகரித்தார்.
வடக்கு மாகாண அமைச்சரான என்னிடம் ஓர் துப்பாக்கியுள்ளதாக சக உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தமை எனது சிறப்புரிமையை மீறும் செயலாக உள்ளமையினால், அதனை ஓர் தீர்மானமாக நிறைவேற்றக்கோரி வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இவ்வாறு அவைத்தலைவருக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் எழுதிய கடிதம் தொடர்பில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பதில் அனுப்பி வைத்துள்ளார். குறித்த பதிலில் மேற்படி விடயம் ஓர் தீர்மானமாக இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது. இருப்பினும் இவ் விடயம் தொடர்பில் உங்களின் தன்நிலை விளக்கம் அளிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனப் பதில் வழங்கியுள்ளார்.
இதேநேரம் வடக்கு மாகாண சபையின் கடந்த சிறப்ப அமர்வில் உறுப்பினர் அஸ்மின் தெரிவித்த கருத்து தொடர்பில், அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.