தமிழினத்திற்கு குரோசிய அணி விட்டுச் சென்ற செய்தி என்ன?

பல ஆண்டுகள் ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்து 1991 இல் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டு பல போர்களுக்கும்
பேச்சுவார்த்தைகளுக்கும் முகம் கொடுத்து 1998 இலேயே அதை சர்வதேச ரீதியாக முழுமையாக உறுதிப்படுத்தி தன்னை நிலைநிறுத்தி வலுப்படுத்த ஆரம்பித்த தேசம்இ 21851 சதுரமைல் பரப்பளவில் வெறும் 42 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் தொகையில் சாதிக்க வேண்டும் என்ற ஓர்மத்தில் வானுயர்ந்து எழுந்து இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அதே ஓர்மத்துடன் களம் காண்ட குரோசிய வீரர்கள் கடைசி நிமிடம் வரை ஓருமத்துடன் விளையாடினார்கள் என்பதற்கு அப்பால் பிரான்ஸ் வெற்றி பெற்றாலும் மைதானத்தில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்திய அணி என்று பார்த்தால் அது குரோசியா என பல விளையாட்டு விமர்சகர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

எனவே உலகப் பந்தில் ஒவ்வெரு இனமும் சாதிக்க பிறந்த இனம் அவ் இனங்கள் கால ஓட்டத்தில் சோர்வடைவதை விடுத்து குரோசியா போன்று விளையாட்டில் சாதிப்பதற்கு முன்னர் எப்படி அதற்கு முன்னான கட்டுமானங்களில் சாதித்தார்களோ குரோசிய மக்கள் அவர்களின் வரலாறு தமிழினத்திற்கு பொதுவாகவும் ஈழத்தமிழினத்திற்கு குறிப்பாகவும் ஒரு வரலாற்றுப் படிப்பினையாகவும் அமையட்டும்.

அது மட்டுமன்றி அவர்களிடம் உள்ள ஒற்றுமையே அன் நாட்டை இவ்வளவு வேகமாக கட்டி எழுப்ப காரணமாக அமைந்தது என அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.

இது தமிழர்களிடம் எவ்வளவு உள்ளது என ஒவ்வெரு தமிழரும் ஆராந்து பார்ப்பது காலத்தின் கட்டாயம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.