பிரான்சில் பல்லின மக்கள் இனைந்து வெற்றிவாகை சூடி கொண்டாடிய ரசிகர்கள்!

(செய்தியாளர் ஆனந்.)

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.



உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.இந்நிலையில் இன்று தொடங்கிய இறுதிஆட்டத்தின் துவக்கம் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டது.

இதில் ஆட்டம் தொடங்கிய 18 வது நிமிடத்திலே குரோஷியா அணி வீரர் மரியோ மான்ட்ஜூகிச் அடித்த சுய கோலால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது.

 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர், மீண்டு பிரான்ஸ் உலகக்கோப்பையை தன்வசமாக்கிக்கொண்டது. மோஸ்கோ நகரில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் பிரான்ஸ்-கோர்சியா அணிகள் மோதின. ஆட்ட முடிவில் 4-2 என்ற கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்று, வெற்றிக்கோப்பையை வென்றது. பிரான்ஸில் பல்வேறு இடங்களில் ஒரு லச்சத்துக்கு அதிகமான பல்லின மக்கள் இனைந்து வெற்றிவாகை சூடி கொண்டாடித்தார்கள் ரசிகர்கள்!

 பரிஸ் உட்பட பிரான்ஸ் முழுவதும் 260 இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு போட்டி, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான இரசிகர்களின் கனவு இன்று பலித்தது. பிரான்ஸ் வெற்றி பெற்றதை உலகம் முழுவதிலும் உள்ள பிரெஞ்சு இரசிகர்கள் கொண்டாடித்தீர்க்கின்றனர்.

Champ de Mars இல் கூடியிருந்த இரசிகள் துள்ளி குதித்து ஆரவாரமாக கொண்டாடினர். தவிர நாட்டின் பல பாகங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு பெரும் ஆரவாரத்துடன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 1998 ஆண்டுக்குப் பின்னர் பிரான்ஸ் பெற்றுக்கொள்ளும் உலக்கோப்பை இதுவாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.