குளம் உடைப்பில் நூற்றுக்கணக்கானோர் லாவோஸில் மாயம்!

ஆசிய நாடான லாவோஸின் (Laos) தென் கிழக்கே உள்ள குளம் ஒன்று உடைப்பெடுத்ததில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயுள்ளதாகவும் பலர் பலியாகியுள்ளதாகவும் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அட்டாபு (Attapu) மாகாணத்திலுள்ள குறித்த குளம் நேற்று (23) உடைப்பெடுத்ததில் 6 கிராமங்களின் ஊடாக வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

குள உடைப்பால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 6,600க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.ஆனால், குளம் உடைப்பெடுத்ததற்கான காரணம் எதுவும் வௌியாகவில்லை.
Powered by Blogger.