யாழ் மல்லாகம் சம்பவ இளைஞனுக்கு மீண்டும் விளக்கமறியல்!
யாழ்.மல்லாகத்தில் கடந்த-17 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்
தெல்லிப்பழைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞர் மீண்டும் மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு கடந்த-29 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது 11 சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ள முதலாம், நான்காம், ஏழாம் சந்தேகநபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் துப்பாக்கிச் சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது வெளியில் நிற்கும் நிலையில் இறந்தவருக்கு உதவி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருக்கிறார்கள்.
இந்த மூவரும் முன்னர் நீதிமன்றத்தில் எந்தவொரு வழக்குகளுடனும் சம்பந்தப்படாதவர்கள்.அதிலும் ஜெயசீலன் என்பவர் கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுச்சுகாதாரப் பரிசோதகருக்கான பரீட்சை எழுதுவதற்குச் செல்ல வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையே இந்தப் பரீட்சை இடம்பெறுவதால் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடுவது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அவரை மாத்திரமெனும் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு மன்றிடம் கேட்டுக் கொண்டார்.
சட்டத்தரணி சுகாஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் சந்தேகநபரான ஜெயசீலன் பொலிஸாரின் பாதுகாப்புடன் கொழும்பு சென்று பொதுச்சுகாதாரப் பரிசோதகருக்கான பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் நேற்றைய தினம்(02) குறித்த இளைஞர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையானார். இதன் போது குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை