யாழ்.மல்லாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

யாழ்.மல்லாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் இன்று செவ்வாய்க்கிழமை(03) பிற்பகல் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


யாழ். காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது இன்று பிற்பகல்-02.30 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர் தனக்குத் தானே நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர். திருகோணமலையைச் சேர்ந்த என்.நஸீர்(வயது-25) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சினையே தற்கொலைக்கான காரணமென ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை,மேற்படி சம்பவம் தொடர்பாகத் தெல்லிப்பழைப் பொலிஸார் தீவிர விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.