ஊழல் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வோம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உட்சபத்தின்போது யாழ்.மாநகரசபையினால் கடைக ள் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கையில் ஊழல் இடம்பெறுகிறதா? என்பதை நாம் தொடர்ந்தும் அவதானிப்போம். என யாழ்.மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார்.


சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மணிவண்ணன் மேற்கண்டவாறு கூறியு ள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சப காலங்களில் மாநகர சபையால் கடைகள் வழங்கப்ப ட்டு வருவது வழமை. ஆனால் அந்தக் கடைகள் வழங்கலில் கடந்த மாநகர சபை ஆட்சிக் காலங்களில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே அத்தகைய முறைகேடுகள் இனியும் இடம்பெறாத வகையில் மாநகர சபையின் செயற்பாடுகள் அமைய வேண்டியது அவசியம். ஆனால் இம் முறை திருவிழாக் காலங்களில் கடைகள் வழங்குவது தொடர்பில் சபையில் எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படாமல்

கடைகள் வழங்கப்படுவதாக அறிகின்றோம். அதிலும் அந்தக் கடைகள் வழங்குவதில் பல உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே உள்ளுர் வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்

அவர்களுக்குரிய கடைகளை அல்லது இடங்களை வழங்க வேண்டும்.  எமது வர்த்தகர்கள் பாதிக்கப்படாத வகையின் சபையின் செயற்பாடுகள் அமைய வேண்டும். ஆகவே இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்ற சபை அமர்வின்போது

உள்ளுர் வியாபாரிகளின் நலனைக் கருத்திற் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுக்கவிருக்கின்றோம். ஏனெனில் கடந்த காலங்களில் உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதே போன்று தற்போதும் உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே இம் முறை உள்ளுர் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை வழங்க ப்பட வேண்டும். மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேரந்த வியாரிகளுக்கும் அடுத்ததாக கடைகள் வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை கடந்த காலங்களில் நல்லூர்க் கந்தனின் புனிதத் தன்மைக்க களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அகவே இம் முறை அந்த விடயத்திலும் விசேட கவனமெடுத்துச் செயற்பட வேண்டும்.

குறிப்பாக கடைகள் வழங்கலில் தனிநபர் செல்வாக்கு மற்றும் இலஞ்சம் என்பன கடந்த காலங்களில் காணப்பட்டதாகவும் ஆனாலும் இம் முறை அதற்கு இடமளிக்க hத வகையிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவை எல்லாம் குறித்து விசேட கவனமெடுத்து சில தீர்மானங்களையும் நிறைவேற்றவுள்ள அதே வேளையில் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ள உள்ளதாகவும் மணிவண்ணண் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.