பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் எண்ணமோ, நல்லிணக்கத்தை நடைமுறையில் உருவாக்கும் எண்ணமோ இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது. என நீதி, சமாதான ஆணைக்குழு இயக் குனர் அருட்திரு மதனராசா கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறி யுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்ட த்தினை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதியளித்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பயங்கரவாத தடைச்ச ட்டத்திற்க்கு மாற்றாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கும் முயற்சிகள்

மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு நிகரானது என்பதால் அத னை நாம் ஏற்கவில்லை. இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் 110 வரையான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து

கொண்டிருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் உண்மையில் நல்லிணக்கத்தை கொண்டுவருவதற்கு விரும்பும் ஒரு அரசாங்கமாக இருந்தால் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

ஆரம்பத்தில் 210 வரையான அரசியல் கைதிகள் சிறையில் இருந்தனர். அவர்களில் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுவிக்கவில்லை.

மாறாக அவர்களிடம் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது. என்ற அடிப்படையில் சட்டரீதியாகவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்நிலையில் அரசியல் கைதிகளுi டய குடும்பங்கள் வறுமையோடு பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே அரசாங்கம் உண்மையாக நல்லிணக்கத்தை விரும்பினால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றார். தொடர்ந்து முன்னாள் தமிழ் அரசியல் கைதி ஜெயராம் இராமநாதன் கூறுகையில் 10 வருடங்களில் அரசியல் கைதியாக இருந்தேன்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. என்னைபோல் மிக நீண்டகாலம் சிறைகளில் எமது உறவினர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் அவர்க ளுடைய குடும்பங்களுடன் இணைந்து வாழ விரும்புகிறார்கள்.

அவர்கள் குற்ற ஒப்பதல் வாக்குமூலம் வழங்கியமை தமக்கு தண்டணை குறைக்கப்படும் விரைவில் வீடுகளுக்கு செல்லலாம் என்ற விருப்பதினாலேயே தவிர, தங்கள் சுய விருப்பின் அடிப்படையில் அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கவில்லை.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நான் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பல தலைவர்களுக்கு அரசியல் கைதிகளின்

பட்டியல் உள்ளிட்ட தகவல்களை வழங்கினேன். ஆனால் இன்றளவும் அவர்களால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.