மன்னாரில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கெளரவிப்பு விழா!

அகில இலங்கை தமிழ் தின நாடகப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களும், வாசிப்பு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவியும் மன்னாரில் இன்று கௌரவிக்கப்பட்டனர்.

மன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில்,வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் பிரதான பாலத்தடிக்கு முன் குறித்த வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானது. பிரதான பாலத்தடியில் இருந்து வாத்திய இசையுடன் ஊர்வலமாக மன்னார் வலயக்கல்வி அலுவலகம் வரை மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் மன்னார் வலயக்கல்வி பணிமனையில்,வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில்,பாராட்டு நிகழ்வு இடம் பெற்றது.

நிகழ்வில் பாடசாலைஅதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.