பம்பலபிட்டியில் திடீரென தீப்பற்றிக்கொண்டமகிழுந்து!

பம்பலபிட்டி பகுதியில் மகிழுர்தி ஒன்று தீப்பற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஆர் ஏ டி மெல் மாவத்தையில் ரெஜினா வீதியிலேயே குறித்த கார் தீப்பற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மகிழுர்தி தீப்பற்றிக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

#Car  #colombo_4   #Bambalapitiya_colombo #Fire 

No comments

Powered by Blogger.