மனித எலும்புக்கூடு அகழ்வை பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள்!

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள் இருவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மன்னார் சதொச விற்பனை கட்டுமான பணியின் போது வளாகத்தினுள் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அகழும் பணிகள் இன்று 41வது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகளையும் அகழ்வு பணிகளையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக ஆணையாளர்களான, கணபதிப்பிள்ளை வேந்தன், ரகீம் மிராக் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸவிடம், அவர்கள் அகழ்வு பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்துக் கொண்டதாகவும் எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.