முள்ளிக்குளம் மக்கள் தமது காணி வளாகத்திற்கு முன்னதாக கூடாரங்களை அமைத்து போராட்டம்!

22.07.2018 இன்று மன்னார் முள்ளிக்குளம்.கிராமத்தில் தமது பூர்வீக இடத்தில் உள்ள தமது வீடுகளில் கடற்படையினரின் குடும்பங்கள் இருக்கிறார்கள் அதனை உடனடியாக எழுப்பும் நோக்கோடு முள்ளிக்குளம் மக்கள் தமது காணி வளாகத்திற்கு முன்னதாக கூடாரங்களை அமைத்து தங்கள் பூர்வீக நிலத்தினை மீட்பதற்காக அமைதி வழியிலான போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

தாம் வாழ்ந்த இடங்கள் தமக்கு வேண்டும் என்று போராட்டம் செய்தோம். அதனை இடைநிறுத்தினார்கள் எமது இடத்தை 8 மாதத்துக்குள் விடுவதாக கூறினார்கள் இன்றுவரைக்கும் விடவில்லை. அதனால்தான் நாம் எமது பங்குத்தந்தையின் ஆலோசனைப்படி எமது வீடுகளுக்கு முன்னால் உள்ள சிறு பற்றைகளை அகற்றி சிறு கூடாரம் அமைத்து இருக்கின்றோம். இதனை கருத்தில்கொண்டு அனைத்து புலம்பெயர் உறவுகள் மற்றும் பல தரப்பினர்களும் ஒன்றிணைந்து எமது இடத்தைமீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். முள்ளிக்குளம் வாழ்மக்கள்-மன்னார். 

No comments

Powered by Blogger.