மிஹிந்து செத் மெதுரே - புதிய தியான மண்டபம் திறப்பு!

அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரேயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தியான மண்டபம் இராணுவ தளபதி லெப்டினென்ட ஜெனரல் மகேஷ் சேனநாயகவினால் திறந்துவைக்கப்பட்டது.


மிஹிந்து செத் மெதுரே முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அவயங்களை இழந்த 41 இராணுவ வீரர்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் இப் புதிய தியான மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய தியான மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்விற்காக மறுவாழ்வு பணிப்பகத்தின் ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ்.கே திருநாவுக்கரசு மற்றும் மிஹிந்து செத் மெதுரே கட்டளை தளபதியான கேர்ணல் என்.பி.ஏ குணவர்தனவின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி கலந்து கொண்டார்.
இதற்கமைவாக இராணுவ தளபதி லெப்டினென்ட ஜெனரல் மகேஷ் சேனநாயகவினால் பிரித் நினைவு படிகத்தை திறந்து வைத்ததுடன் தியான மண்டபத்தையும் நேற்று திறந்து வைத்தார்இந்த புதிய தியான மண்டபமானது ஒரே தடவையில் 60 க்கும் அதிகமான படையினர் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதியின் வருகையின் அடையாளமாக மிஹிந்து செத் மெதுரே வளாகத்தில் 'சல்' மரக்கன்றொன்றும் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேநீர் விருந்துபசாரத்தின் போது இராணுவ தளபதியவர்கள் மிஹிந்து செத் மெதுரேயில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அவயங்களை இழந்த இராணுவ வீரர்களுடன் சில கருத்துக்களையும் பாரிமாறிக் கொண்டார்.

இந்த நிகழ்விற்கு இராணுவ சுகாதார சேவையின் பணிப்பாளர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, நிறைவேற்று ஜெனரல் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, இராணுவ சேவை செயலகத்தின் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க, சுகாதார சேவை பணிப்பாளர் மேஜர் மேஜர் ஜெனரல் கே.பீ சுமனபால, மறுவாழ்வு பணிப்பகத்தின் ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ்.கே திருநாவூகரசு அவர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.