பிரிட்டனில் தமிழர் ஒருவர் கொள்ளையர்களின் துப்பாக்கி முனையில் !
பிரிட்டனில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொள்ளையர்களின் துப்பாக்கி முனையில் இருந்து தப்பியுள்ளார்.Long Eaton பகுதியின் Wellington Street பகுதியில் கடை ஒன்றை நடத்தும் சிவகுமார் சண்முகம் (வயது 50) என்பவரே துணிச்சலுடன் கொள்ளையர்களை எதிர்கொண்டுள்ளார்.
அவரது கடைக்குள் முகமூடியுடன் நுழைந்த இருவர் அச்சுறுத்திய போது அவர் அச்சமடையாமல் இருந்துள்ளார்.இந்தச் சம்பவம் கடந்த மாதம் 6ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், இதுகுறித்து நேற்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது நெற்றியில் துப்பாக்கியை வைத்தவுடன் அந்த துப்பாக்கி போலியானதென தான் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார்.அதன்பிறகு குறித்த கொள்ளையர்களை கடைக்கு வெளியே விரட்ட ஆரம்பித்ததும் திருடர்கள் தலைதெறிக்க ஓட ஆரம்பித்துள்ளதாக சிவகுமார் தெரிவித்துள்ளார்.
“நான் இலங்கையைச் சேர்ந்தவன். நாங்கள் இதுபோன்று நிறைய சம்பவங்களை பார்த்துவிட்டோம். இவற்றிற்கு எல்லாம் அஞ்சுவதில்லை என சிவகுமார் கூறியுள்ளார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை