அமைச்சர்களுக்கு தொப்பை !சிற்றுன்டிகளுக்கு பதிலாக பல்லின பழவகைகள்!

அமைச்சர்களுக்கு மா மற்றும் எண்ணெய்யைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளை வழங்குவதற்குப் பதிலாக, பழங்களை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளை அண்மித்த இடங்களில், மா மற்றும் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனைத் தடுப்பதற்காக பதப்படுத்தப்பட்ட பழங்களை பாடசாலை கட்டமைப்பில் அறிமுகப்படுத்துவது சிறந்ததென அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், பாடசாலை மாணவர்களுக்கு முன்னுதாரணமாகப் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவையில் இதனை முதலில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழம், மாம்பழம், தோடம்பழம், அன்னாசி, பலாப்பழம் உள்ளிட்ட பழங்களை பதப்படுத்தி பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை சந்திப்புகளின் போது, வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.