காட்டுத்தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!

கடந்த பல வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட காட்டுத்தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இலங்கை இராணுவத்தினர் உதவிகளை வழங்கியுள்ளனர்.

வறட்சியான காலநிலை காரணமாக மலைநாட்டின் நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் திடீரென காட்டுத்தீ ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இதேவேளை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இவ்வாறு பரவிய காட்டுதீயினை மத்திய பாதுகாப்பு படை தலைமையக இராணுவத்தினர் தமது தலையீட்டின் காரணமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.