முள்ளிக்குளம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்கு சுமார் ஒரு வருடங்களின் அங்கு சென்றுள்ள மக்களை மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்ராஸ் இன்று காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு நிலமைகளை அவதானித்தார்.

முள்ளிக்குளம் மக்கள் கடந்த 18 ஆம் திகதி தாமாக் குடியமர்ந்தனர். இந்த நிலையில் குறித்த மக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர், உறுப்பினர்கள் என பல தரப்பினரும் சென்று பார்வையிட்டனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலர் இன்று நேரடியாகச் சென்று மக்களை பார்வையிட்டதோடு முதற்கட்டமாக தற்காலிக கூடாரங்களை அமைக்கத் தேவையான ஒரு தொகுதி தறப்பாள்களை வழங்கியுள்ளார். 
Powered by Blogger.