பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் சிறுவனை இழுத்துச் சென்ற அலை!

பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்ற 14 வயதுச் சிறுவன் கடல் அலையில் வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டான்.

இதனால் சக சிறுவர்கள் சிறிது நேரம் பதறியடித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் நடந்துள்ளது.

ஏனைய சிறுவர்கள் படகின் கயிறு கொண்டு சிறுவனை காப்பாற்றியுள்ளனர். சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான் எனத் தெரியவருகிறது.
#Point Pedro  #Srilanka   #Tamilnews

Powered by Blogger.