பெண் தலைமைத்துவ கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கும்!

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நீங்கள் பெற்றுக்கொண்ட கடனை மீண்டும் செலுத்த முடியாத நிலையில் உள்ளீர்கள் என்பது தொடர்பில் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

கடனை பெற்று மீள செலுத்த முடியாதுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது.

அதற்கான நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. அந்த நிகழ்வில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், மேலும் நான்கு அம்மாச்சி உணவகங்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Powered by Blogger.