லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகழேந்தி ஆஜர்!!
சிறையில் சசிகலாவுக்குச் சலுகைகள் செய்து கொடுக்க லஞ்சம் தரப்பட்டதாக எழுந்த புகார் குறித்த விசாரணைக்காக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி நேற்று கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜரானர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகின்றனர். சிறையில் சசிகலாவுக்குப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், இதற்கு போலீஸ் உயரதிகாரிகள் ரூபாய் 2 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும், கர்நாடக மாநிலச் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரூபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, அம்மாநில மூத்த அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவானது தனது அறிக்கையினை உள் துறை அமைச்சரிடம் தாக்கல் செய்தது.
காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகார் தொடர்பாக கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த விசாரணைக்கு ஜூன் 29ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக மாநில அமமுக செயலாளர் புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால் உடல்நிலையைக் காரணம் காட்டி அன்றைய தினம் புகழேந்தி ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 2) பெங்களூருவில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் புகழேந்தி ஆஜரானார். அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். இந்த விசாரணை பல மணி நேரம் நீண்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “தினகரனுடன் எனக்குள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தினர்” என்று தெரிவித்தார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை