பெண் ஊடகவியலாளருக்கு விடுத்த அச்சுறுத்தலில் மன்னிப்பு கோர வேண்டும்-ரனில்!

ஜனநாயகத்தை மதிப்பவர்கள் என்றால், முன்னாள் தலைவர்கள் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் பெண் ஊடகவியலாளருக்கு
விடுத்த அச்சுறுத்தல் தொடர்பில் மன்னிப்பு கோரி, தாம் வெளியிட்ட கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தொடர்பில் கருத்து ஒன்றை முன்வைத்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

அன்று ஊடகவியலாளர்களுக்கு செய்தவற்றை நாம் பார்த்தோம். பிரகீத் எக்னேலிகொடவை காணாமல் போக செய்தனர். பழைய பழக்கம் மீண்டும் தென்பட ஆரம்பித்துள்ளது.

நியூயோர்க் டைம்ஸ் பெண் ஊடகவியலாளருக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பான கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.