விஐயகலா மகேஷ் வரன் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக் கப்படும்!

தமிழீழ விடுதலை புலிகள் குறித்து பேசிய இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஷ் வரன் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக் கப்படும்.


மேற்கண்டவாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார். யா ழ்.மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலமைக ள் குறித்து ஆராய்வதற்காக

இன்று யாழ்.வந்த சட்டம் ஒழுங்கு அமைச்ச ர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

விஐயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை பல ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அந்த உரைக்கு ஆதரவாகவும் அதே நேரம் எதிர்ப்பாகவும் வடக்கிலும் தெற்கிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆகவே அவை குறித்தான விசாரணைகளோ அல்லது நடவடிக்கைகளோ என்பன தொடர்பில் சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலையே எங்களால் செயற்படுகிறோம்.

இதற்கமைய சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவை குறித்து நாங்கள் அனுப்பி அதன் பின்னரே இறுதி முடிவெடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  
Powered by Blogger.