யாழ் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வன் செயல்களை க ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான உடனடி ந டவடிக்கைகளை எடுங்கள்.


மேற்கண்டவாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.

யாழ்.மாவட்டத்தில் வன் செயல்கள் அதிகரித்துள்ள து. இது குறித்து ஆராய்வதற்காக இன்று யாழ்.வந்த அமைச்சர் யாழ்.பொலிஸ் நிலையத்தில்

விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தா ர் இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே தாம் மேற்படி உத்தரவு வழங்கியுள்ளதாக

கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையி ல், அண்மைய நாட்களில் இங்கு சில வன்செயல்கள் நடந்துள்ளன.

அவை தொடர்பில் ஆராய்வதற்காகவே நாங்கள் வந்திருக்கின்றோம். அதனடிப்படையில் பொது மக்கள் நலன் கருதி சட்டம் ஒழுங்கை உரிய

முறையில் நிலை நாட்டுமாறு நாம் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளோம். இதேவேளை யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு, கொள்ளை, பாலியல்

துஸ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலரையம் கைது செய்திருக்கின்றோம்.

ஆகவே அதே போன்றே நாம் தொடர்ந்தும் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். மேலும் இவற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்கு பொது

மக்களினது ஒத்துழைப்புக்கள் எமக்கு மிக மிக அவசியமானவை. அவ்வாறான ஒத்துழைப்புக்கள் கிடைக்கும் போது தீவிரமாக செயற்பட முடியும்.

அமைச்சர்கள் வருகையால் குற்றங்கள் குறையுமா?

நாட்டில் எங்கு ஒரு இடத்திலாவது குற்றச் செயல்கள் நடக்கின்ற போது அதற்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டியது எங்கள் கடமை.

ஆதற்கமையவே இன்றைக்கு இங்கும் வந்திருக்கின்றோம். ஆனாலும் கடந்த காலங்களிலும் இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தியும் இருக்கின்றோம்.

அதே போன்று இம் முறை இதனை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குரிய அத்தனை நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொள்வோம்.

இதற்கமைய எதிர்காலத்தில் விசேட குழுக்களை அமைத்து செயற்படுவதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்.

 ஐனாதிபதி பிரதமர் ஆகியோரின் ஆலோசனையினடிப்படையில் இங்கு வந்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளதுடன் சட்டம்

ஒழுங்கை நிலை நாட்டுமாறும் பொலிஸாருக்கு கூறியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
Powered by Blogger.