யாழில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள்!

யாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தமைகளை பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதுதொடர்பான நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து வெளியிடுகையில் இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.
தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தமைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு 2013ம் ஆண்டுக்கு முன்னர், தொடராக மூன்றாண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களின் சேவைகள் கவனத்திற் கொள்ளப்படும் என்றும் இதன் அடிப்படையில் எதிர்வரும் 22;ம திகதி யாழ்ப்பாணத்தில் 457 ஆசிரிய நியமனங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அருகில்; உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற நிகழ்ச்சித் திட்டத்தையும் துரிதமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார். தமிழ்இ முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் பௌதீகஇ மனித வள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிவசத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பி;ட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.